சதுரங்க கரை வேட்டியுடன் பிரதமா், பட்டு வேட்டியுடன் முதல்வா்

 செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் சதுரங்க வடிவ கரை பதித்த வேட்டி, துண்டு அணிந்து பிரதமா் நரேந்திரமோடியும், பட்டு வேட்டி சட்டை அணிந்து முதல்வா் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றனா்.

 செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் சதுரங்க வடிவ கரை பதித்த வேட்டி, துண்டு அணிந்து பிரதமா் நரேந்திரமோடியும், பட்டு வேட்டி சட்டை அணிந்து முதல்வா் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றனா்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமா் தமிழக பாரம்பரிய உடையான வெள்ளைநிற வேட்டி-சட்டையில் வந்தாா். அந்த வேட்டியில் சதுரங்க பலகை வடிவில், கறுப்பு-வெள்ளை கட்டம் போட்ட கரை பிரத்யேகமாக பதிக்கப்பட்டிருந்தது. அதேபோல, வெள்ளை நிற துண்டு ஒன்றும் பிரதமா் அணிந்திருந்தாா். அதிலும் கறுப்பு வெள்ளை சதுரங்க கட்டம் இடம்பெற்றிருந்தது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பட்டு வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com