எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இதுபோன்ற நிகழ்வு நடந்தது: சசிகலா

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது என்று சசிகலா தெரிவித்துள்ளார். 
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இதுபோன்ற நிகழ்வு நடந்தது: சசிகலா

எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது என்று சசிகலா தெரிவித்துள்ளார். 

அதிமுகவின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்த பின்பு சசிகலா பேட்டியில், தான் ஓ.பன்னீர்செல்வம் பக்கமோ, எடப்பாடி பழனிசாமி பக்கமோ இல்லை. அதிமுகவில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் காலப்போக்கில் சரியாகிவிடும். கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தேன். 

அனைவரையும் ஒருங்கிணைத்து ஒன்றாக அரவணைக்கும் இயக்கம்தான் அதிமுக. அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியர்கள். அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இதுபோன்ற நிகழ்வு நடந்தது. 

பின்னர் அனைவரும் ஒன்றாக இணைந்தனர். அதுபோல மீண்டும் நடக்கும். தொண்டர்கள் நினைப்பதுதான் எனது செயல்பாடாக இருக்கும். எனது பயணத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தொண்டர்கள் விருப்பப்படி எனது தலைமையில் அதிமுக மீண்டும் இணைய நிச்சயமாக வாய்ப்பு உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com