
புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோவிலின் தேர்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
அப்போது எதிர்பாராத விதமாக தேர் சரிந்து முற்றிலுமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. 6 பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.