'வரலாறுகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் பேராசிரியர்கள்  புத்தகங்களை எழுத வேண்டும்'

வரலாறுகளைத் தெரிந்துக் கொள்ளும் வகையில் பேராசிரியர்கள் நல்ல புத்தகங்களை எழுத வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வேண்டுகோள் விடுத்து பேசினார்.
'வரலாறுகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் பேராசிரியர்கள்  புத்தகங்களை எழுத வேண்டும்'

செய்யாறு: நாம் வரலாறுகளைத் தெரிந்துக் கொள்ளும் வகையில் பேராசிரியர்கள் நல்ல புத்தகங்களை எழுத வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வேண்டுகோள் விடுத்து பேசினார்.

திருவண்ணாமலை மாவட்ட  வரலாற்று ஆய்வு நடுவம் மற்றும் செய்யாறு ரோட்டரி சங்கமும் இணைந்து தொல்லியியல் மற்றும் புகைப்படக் கண்காட்சி, புத்தக வெளியீடு, விருது வழங்கும் விழா, கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகளுடன் கூடிய முப்பெரும் விழா என செய்யாறில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. 

செய்யாறு ஸ்ரீசக்தி மகாலில் நடைபெற்ற  விழாவின் ஒரு பகுதியாக காலை அப்பகுதியில் அமைக்கப்பட்ட  தொல்லியல் மற்றும் புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் த.ம.பிரகாஷ் தலைமைத் தாங்கினார். செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் பா.வினோத்குமார் திறந்து வைத்தார். 

செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, விருட்சம் பள்ளி தாளாளர் முத்துக்குமார், ரோட்டரி சங்கத் தலைவர் சுந்தர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்னர் இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் வரலாற்றில் அத்தி, வெண்குன்றம், கூழமந்தல், குரங்கணில் முட்டம், பிரம்மதேசம், சீயமங்கலம் ஆகிய புத்தகங்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தொல்லியல் துறையில் சாதனை செய்த வீரராகவன் -மங்கை, ச.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வழங்கி கெளரவித்தார். 

அப்போது அவர் பேசியாதாவது: வரலாற்று நூல்களை எழுதிய லோகேஷ்குமார், கிஷோர், ராதாபாலன், பாபு மனோ, சீயமங்களம், திமா வ.ஆ.ந. ஆகியோருக்கு எனது முதற்கண் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு விழிப்புணர்வு ஏற்படுகின்ற வகையிலே திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கின்ற வரலாற்று பெருமைகளை எல்லாம், ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒவ்வொரு வரலாற்று சுவடுகள் தனித்தனியாக இருக்கின்றது என்று மற்ற நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையிலே நல்ல நிகழ்ச்சியாக, இந்த இயக்கத்தின் சார்பாக இன்றைக்கு ஏழு நூல்கள் வெளியிடப்பட்டு இருக்கினறன. 

செய்யாறு பகுதியிலேயே இருக்கின்றன ஏழு வரலாற்று சுவடுகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையிலே வரலாற்றில் ஆர்வமுள்ள பேராசிரியர்கள் எல்லாம் இணைந்து இந்த புத்தகங்களை எழுதி வெளியிட்டமைக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க கடமைப்பட்டு இருக்கின்றேன். 

திருவண்ணாமலை மாவட்டம் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலக்கட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புப் பெற்ற இடங்கள் இருந்து வருகின்றன  என்பதற்கு சான்றுகள் உள்ளன.

இன்றைக்குக் கூட ஜவ்வாதுமலையில் அந்த காலத்தில் வசித்த குள்ளர் குகைகள் இருந்துக் கொண்டு இருக்கிறது. அங்கே ஒரு கோயில் இருக்கிறது, 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஜவ்வாது மலையிலேயே இருந்துக் கொண்டு இருக்கிறது.

இதையெல்லாம் யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு விளம்பரம் இல்லாமல் இருந்து இருக்கிறது. அவையெல்லாம் விளம்பரம்படுத்துக்கின்ற வகையிலேயும், அவற்றையெல்லாம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையிலேயும் வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் பல்வேறு வகையிலே இவையெல்லாம் புத்தகங்களாக எழுதி வெளியிட்டு அவற்றை பலப்பேர் பார்க்கின்ற சுழலை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். 

பிரம்மதேசம் என்பது ராஜேந்திர சோழனுடைய அவரது இறுதிக் காலக்கட்டத்தில் அவரை அடக்கம் செய்த இடம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு பிரம்மதேசம் புகழ்பெற்ற பகுதியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. வரலாற்று சிறப்பு பெற்ற ஊராக பிரம்மதேசம் விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று சொல்ல கடமைப்பட்டு இருக்கின்றேன்.

இன்றைக்கு திருவண்ணாமலையில் இருக்கின்ற கோயில்கள் பல மன்னர் காலங்களில் கோயில்கள் சிறு சிறுக கட்டப்பட்டு விஜயராகவ பேரரசுக் காலத்தில் கட்டப்பட்டது. அதேப்போல் பல்வேறு அரசர்கள் அதனை ஆண்ட வரலாறுகள் எல்லாம் கல்வெட்டுகளாக திருவண்ணாமலை கோயிலில் இன்றைக்கும் காணப்படுகிறது. அதேப் போல் செய்யாறில் உள்ள திருவோத்தூர் கோயிலும் புகழ்பெற்ற கோயிலாகும். 

வட இந்தியாவிலேயே இருக்கக்கூடிய ஆக்ராவிற்குப் போய் தாஜ்மகால் கோட்டையான  வரலாற்று சின்னத்தை நாம் பார்த்து வருகிறோம். ஆனால் நம் பகுதியில் உள்ள செஞ்சிக்கோட்டை இருக்கிறது. ஆனால் அதனை எத்தனைப் பேர் பார்த்து இருக்கின்றோம் என்றால், ரொம்பப் பேர் பார்க்கவில்லை.  ஏனென்றால் மலை மீது ஏறிப் பார்கக வேண்டியுள்ளது.  அதனால் ரொமபப் பேர் போய் பார்ப்பதே கிடையாது. அப்படிப்பட்ட செஞசிக் கோட்டைக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்துவதற்காக நீண்ட காலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட செஞ்சிக் கோட்டைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ரோப்கார் வசதி கண்டிப்பாக ஏற்படுத்தப்படுத்தித் தரப்படும். அந்தப் பகுதிக்கும் சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுழல் உருவாக்கப்படும்.

கல்லூரிகளில் பணிபுரியும் வரலாற்று பேராசிரியர்கள் இப்படிப்பட்ட ஒவ்வொரு கிராமத்தின் பெருமையும் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையிலே அப்படிப்பட்ட புத்தகங்களை எழுத வேண்டும். பல்வேறு வகையிலே நம்முடைய திருவண்ணாமலை மாவட்டம் வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்ற மாவட்டம். வரலாற்று முக்கியப் பெற்ற மாவட்டத்தின் வரலாற்றுகளை மக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் வரலாற்று ஆய்வாளர் பாலமுருகன் போன்றவர்கள் எல்லாம் ஒரு நீண்ட காலமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கண்டுபிடித்து இன்று அழகாக காட்சிப்படுத்தியிக்கிறார்கள்.

2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழர்கள் இரும்பைக் காய்ச்சியிருக்கிறார்கள் என்று கீழடி அகழ் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இப்படிப்பட்டவை பல கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது. இவையெல்லாம் யாரால் கண்டுபிடிக்க முடியும் என்றால், வரலாற்று போராசிரியர்களால் அதில் ஆர்வத்தோடு ஈடுபடுத்திக் கொண்டால் அவைகள் எல்லாம் கண்டுபிடிக்க முடியும். கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இரு்நதாலும் இப்படிப்பட்ட வரலாற்று முக்கியமானவைகளை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையிலேயே நல்ல புத்தகங்களை எழுத வேண்டும் என்றார்.  
முன்னதாக அரசு பள்ளி மாணவிகள் பங்குப் பெற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில்  செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், நகர மன்ற துணைத் தலைவர் குல்சார், ஒன்றியக் கவுன்சிலர்கள் ஞானவேலு, சிட்டிபாபு,  நகர செயலாளர் கே. விஸ்வநாதன்,  வெங்கடேஷ் பாபு, முன்னாள் சேர்மன்கள் சங்கர், ஏ.என்.சம்பத், ஒன்றிய செயலாளர் எம்.தினகரன், வட்டாட்சியர்கள் பாஸ்கர், வேணுகோபால். திருமலை, சுபாஷ் சந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com