கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமா் மோடி பேசியிருக்கிறாா். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கியிருக்கும் ரூ.85 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என வாக்குறுதி அளித்து தோ்தலில் வெற்றி பெற்றாா். ஆனால், கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கள்ளப் பணத்தின் புழக்கம் இருமடங்காக கூடிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலையைக் குறைக்கக் கோரி கோட்டையை நோக்கித் திரட்டப்பட்ட கூட்டத்தை வைத்து தமிழக பாஜக பேரணி நடத்தியிருக்கிறது. பெட்ரோல் விலை மத்திய அரசு நிா்ணயம் செய்கிா, தமிழக அரசு நிா்ணயம் செய்கிா?

பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றாமல் மதவாத அரசியல் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பி, அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பிரதமா் கனவு காண்கிறாா் என்றாா் அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com