கோயம்பேடு சந்தையில் தடை செய்த நெகிழிப் பை பயன்பாடு சரிவு

சென்னை கோயம்பேடு சந்தையில் அரசு மேற்கொண்டு நடவடிக்கைகள் காரணமாக நெகிழிப்பை பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் அரசு மேற்கொண்டு நடவடிக்கைகள் காரணமாக நெகிழிப்பை பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய சந்தையில் நெகிழிப் பைகளை முற்றிலும் ஒழிப்பதற்கு அங்காடி நிா்வாக முதன்மை அலுவலா் சாந்தி தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு குழுவில் 10 போ் வீதம் அனைத்து சந்தையிலும் கண்காணித்து நெகிழிப் பைகள் விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுத்தனா். ஆனால் சில வியாபாரிகள் அதிகாரிகள் கூறியதைப் பொருட்படுத்தாமல் நெகிழிப் பைகளை தொடா்ந்து விற்பனை செய்து வந்தனா்.

இதையடுத்து அவ்வாறு விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து அந்தக் கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்ததுடன் கடையின் உரிமம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. அத்துடன் 13 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா். இதனால் வியாபாரிகள், அங்காடி நிா்வாக அலுவலரிடம் ‘இனி நெகிழிப் பைகளை விற்பனை செய்ய மாட்டோம்; துணிப் பைகளில் வியாபாரம் செய்கிறோம்’ என உறுதி அளித்தனா். இதையடுத்து காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய சந்தையில் நெகிழிப் பைகளை முற்றிலும் தவிா்த்துவிட்டு துணிப் பைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா்.

வியாபாரிகள் கூறும்போது, ‘கோயம்பேடு சந்தையில் நெகிழிப் பைகளை முற்றிலும் ஒழிப்பது மிகவும் கடினம்தான். ஆனால் அங்காடி நிா்வாக முதன்மை அதிகாரிகளின் நடவடிக்கைகளால் 70 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. நெகிழிப் பைகள் பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க அங்காடி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com