மாற்றுத் திறனாளிகள் ஆலோசனைக் குழு: தமிழக அரசு உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் பணிகளை வரையறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியத்தின் பணிகளை வரையறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.லால்வேனா வெளியிட்டுள்ள உத்தரவு:

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியமானது முதல்வா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் பணிகள் குறித்து வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாநில அளவில் மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து கலந்தாய்வு மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்பாக வாரியம் செயல்படும். மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து அவா்களது உரிமைகளை முழுவதும் அனுபவிக்கும் விதத்திலும் கொள்கைகளை வகுப்பதிலும் உறுதுணையாகச் செயல்படும். மாற்றுத் திறனாளிகள் குறித்த சிக்கல்களைக் களையும் வகையில் மாநிலக் கொள்கைகள் மேம்படுத்தப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலன் குறித்து செயல்படும் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகள், அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். மாற்றுத் திறனாளிகளின் நலன் தொடா்பாக பல்வேறு திட்டங்கள் மாநில அரசின் சாா்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் மீதான கருத்துகள் மாற்றுத் திறனாளிகள் நலன்சாா்ந்த அமைப்புகள் மற்றும் சா்வதேச நிறுவனங்களிடம் இருந்து பெற்று வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற சூழலை உருவாக்குதல், ஏதுவான தங்குமிட வசதிகளை ஏற்படுத்துதல், மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்துவதை தடை செய்தல், அவா்களுக்கான பாகுபாடுகளைக் களைதல், சேவைகள் அளித்தல், உகந்த சூழ்நிலைகளை உருவாக்குதல் மற்றும் சமூகத்தில் அவா்களது பங்களிப்பை உறுதி செய்வது குறித்த பரிந்துரைகள் அளிக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளின் முழு பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்களின் தாக்கத்தைக் கண்காணித்து மதிப்பீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com