உலக சுற்றுச்சூழல் நாள்: மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு

உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை தரம்பித்து ஓவிய வடிவில் வடிவமைத்து ஞாயிற்றுக்கிழமை யோகா கலைஞர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஓவிய வடிவில் காட்சி படுத்தப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சுற்றி நின்று சுற்றுச் சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ற யோகா கலைஞர்கள்.
மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் ஓவிய வடிவில் காட்சி படுத்தப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சுற்றி நின்று சுற்றுச் சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ற யோகா கலைஞர்கள்.



செங்கல்பட்டு: உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை தரம்பித்து ஓவிய வடிவில் வடிவமைத்து ஞாயிற்றுக்கிழமை யோகா கலைஞர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

உலக சுற்றுச்சூழல் நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 5) கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத் தளமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் கடற்கரையில் தூக்கி வீசப்படும் குப்பைகளால் கடற்கரை பகுதி நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. 

இதனையடுத்து உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு மாமல்லபுரத்தை சேர்ந்த அபிராமி யோகாலயா யோகா மையம் சார்பில் தலைமை பயிற்சியாளர் சுரேஷ்பாபு தலைமையில் யோகா கலைஞர்கள், சுற்றுலா வழிகாட்டி வரதராஜன், கவிஞர் மல்லை மோகனன் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து கடற்கரை கோயில் அருகில் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். 

ஓவிய வடிவில் காட்சி படுத்தப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சுற்றி நின்று சுற்றுச் சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்ற யோகா கலைஞர்கள்.

அப்போது, கடற்கரையில் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், உணவு கழிவுகள், தூக்கி வீசப்பட்ட பழைய துணிகள, காலணிகள், காகித அட்டைகள், அழுகிய பழங்கள் உள்ளிட்ட குப்பைககளை தரம் பிரித்து கடற்கரை மணலில் இந்திய வரைபடம் வரைந்து அதனை சுற்றி தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை காட்சி படுத்தி சுற்றுலா வந்த பயணிகளிடம் இதுபோன்ற குப்பைகளால் கடற்கரை பகுதி மாசு ஏற்படுகிறது என்றும், அதனால் பிளாஸ்டிக் பயன்படுத்தாதீர்கள் என்றும், குப்பைகளை கண்ட இடங்களில் வீசாதீர்கள் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அப்போது, யோகா கலைஞர்கள் ஓவிய வடிவில் காட்சி படுத்தப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை சுற்றி வட்ட வடிவில் நின்று சுற்றுச் சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.

தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை ஓவிய வடிவில் காட்சி படுத்தும் யோகா கலைஞர்கள்.

அப்போது, இதனை காண வந்த சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொருவரிடமும் இதுமாதிரி குப்பைகளால் மாமல்லபுரம் கடற்கரை பொலிவிழந்து வருகிறது என்றும், இங்கு யாரும் குப்பைகளை போடாதீர்கள் என்று அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com