ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடப்பட்டதா என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இதில் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதியில் காட்டு யானை, புள்ளிமான், காட்டு மாடு, சிறுத்தை, புலி என விலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

இந்நிலையில் டாப்ஸ்லிப்லிருந்து ஒட்டியுள்ள பரம்பிக்குளம் பெரியார் புலிகள் காப்பகம் பகுதி உள்ளது, தூணக்கடவு அணை ஓரம் 1ல் உள்ள டனால் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியின்போது இறந்த யானையின் எலும்புக்கூடு இருப்பதைக் கண்டு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். 

ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று யானையின் எலும்புக்கூடு கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கேரளா அருகில் உள்ளதால் மர்ம நபர்கள் யானையைக் கொன்று தந்தத்தைத் திருடி வேட்டையாடி இருக்கலாம் என கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

கடந்த சில தினங்களாக அணையில் நீர்மட்டம் குறைந்ததால் யானையின் எலும்புக்கூடு வெளியே தெரியவந்தது. மேலும் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ள யானையின் எலும்புக்கூடு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு யானை நீர் இழப்பு குறித்து அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும் என கள இயக்குனர் தகவலாக தெரிவித்துள்ளனர்.

மேலும் டாப்சிலிப் பகுதியில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் பல வருடங்களாகவே அங்கு பணியில் உள்ளனர். வனத்துறையினர் அப்பகுதிக்கு ரோந்து சென்றதனால்தான் யானை இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. இல்லையெனில் யானை இறந்த செய்தி வெளியே தெரிய வந்து இருக்க முடியாது. முறையாக ரோந்து பணி சென்றால் வனவிலங்குகளைப் பாதுகாக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில வருடங்களாக கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் இழப்பு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com