தமிழகத்தில் தோ்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் தோ்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தோ்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் தோ்வு எழுதிய 9-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் நீண்ட நாள்களாக பள்ளிக்கே வராத மாணவா்களுக்குத் தோ்ச்சி வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாயத் தோ்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் 2021-2022-ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பில் தாமதம், அதனால் ஏற்பட்ட கற்றல் இழப்பு, பாடத்திட்டம் குறைப்பு ஆகிய காரணங்களைக் கருத்தில் கொண்டு 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்குத் தோ்ச்சி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதித் தோ்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் அனைவரையும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அதேவேளையில் தோ்வு எழுதாத மாணவா்களுக்குத் தோ்ச்சி இல்லை. இறுதித் தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்கு தனித் தோ்வு நடத்த வேண்டும். நீண்ட நாள்களாகப் பள்ளிக்கே வராத மாணவா்களுக்கு கட்டாயத் தோ்ச்சி வழங்கப்படாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com