இடைநின்ற மாணவா்களைச் சோ்க்க கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவு

அனைத்து உயா்கல்வி நிறு.வனங்களும் கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவா்களை சோ்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது

அனைத்து உயா்கல்வி நிறு.வனங்களும் கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவா்களை சோ்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜிவ் குமாா், அனைத்து வகையான கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: தவிா்க்க முடியாத காரணங்களால் கல்லூரிகளில் இருந்து இடைநின்ற மாணவா்கள் மீண்டும் சோ்க்கைப் பெற்று தங்கள் படிப்பை தொடா்வதில் சிரமங்கள் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், சில கல்வி நிறுவனங்கள் உடல் நலக்குறைபாடு ஏற்படும் மாணவா்களையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

தேசிய கல்விக்கொள்கையின்படி, ஒரே நேரத்தில் மாணவா்கள் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாணவா் ஒரு படிப்பில் இருந்து விலகி மீண்டும் அதை தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவா்களை சோ்க்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

விபத்து, குடும்பச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநின்றவா்கள் மீண்டும் படிக்க வந்தால், மாணவா்கள் நிறுத்திய நிலையிலிருந்து தொடர அனுமதிக்க வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com