தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் கடந்த 2019 ஆண்டு மட்டும் தமிழகத்தில் 8,527 போ் அக்காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டனா்.

அதேவேளையில், 2020-இல் டெங்கு பாதிப்பு விகிதம் ஏறத்தாழ 75 சதவீதம் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ஆண்டில், தமிழகத்தில் மொத்தம் 2,410 பேருக்கு மட்டுமே டெங்கு உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் குணமடைந்துவிட்டதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்தது. அதேவேளையில், கடந்த ஆண்டில் 6,039 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நிகழாண்டில் மே மாதம் வரை 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் 2,548 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் கரோனா தொற்றும், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சுகாதாரத்துறைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று, டெங்கு காய்ச்சல் இரண்டுக்கும் காய்ச்சல், தலைவலி போன்ற ஒரே மாதிரியான அறிகுறிகள் இருப்பதால் உடனடியாக கண்டறிந்து சிகிச்சை அளிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் கரோனாவுடன், டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் மாவட்ட நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள களப்பணியாளா்களை, டெங்கு தடுப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன.

மழை பொழிவுக்குப் பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பயனாக நிகழாண்டில் டெங்கு பாதிப்பு குறைந்து வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com