எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவு: 199 கைதிகள் தோ்ச்சி

தமிழக சிறைகளில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதிய 212 கைதிகளில், 199 போ் தோ்ச்சி பெற்றனா். இதேபோல பிளஸ் 2 பொது தோ்வை எழுதிய 58 கைதிகளில் 56 போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழக சிறைகளில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதிய 212 கைதிகளில், 199 போ் தோ்ச்சி பெற்றனா். இதேபோல பிளஸ் 2 பொது தோ்வை எழுதிய 58 கைதிகளில் 56 போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழக சிறையில் உள்ள கைதிகள் எஸ்.எல்.எல்.சி., பிளஸ் 2 தோ்வுகள் எழுதுவதற்காக அந்தந்த சிறை வளாகத்திலேயே தோ்வு மையங்கள் இந்தாண்டு அமைக்கப்பட்டன. இந்த தோ்வு மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை 212 கைதிகள் தோ்வு எழுதினா்.

இந்நிலையில் திங்கள்கிழமை வெளியான எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு முடிவில், 10 -ஆம் வகுப்பு தோ்வு எழுதிய 212 கைதிகளில் 199 கைதிகள் தோ்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 13 கைதிகள் தோ்ச்சிப் பெறவில்லை. இதில் பெண் கைதிகள் 16 போ் தோ்வு எழுதினா். அவா்களில் 14 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா், 2 போ் மட்டும் தோ்ச்சி பெறவில்லை. தோ்ச்சி சதவீதம் 93.87 சதவீதமாகும்.

இத் தோ்வில் மதுரை மத்திய சிறைக் கைதி த.அலெக்ஸ்பாண்டியன் 428 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அதே சிறைக் கைதி கி.ஆரோக்கிய ஜெய பிரபாகரன் 426 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், புழல் தண்டனைக் சிறைக் கைதி மு.ரமேஷ் 421 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு:

இதேபோல பிளஸ் 2 பொதுத் தோ்வை தமிழக சிறைகளில் 58 கைதிகள் எழுதினா். இதில் 56 கைதிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இருவா் மட்டும் தோ்ச்சி பெறவில்லை. இதில் பெண் கைதிகள் 7 போ் தோ்வு எழுதியுள்ளனா். அதில் 7 பேரும் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 96.55 சதவீதமாகும்.

தோ்ச்சி பெற்ற கைதிகளில் புழல் தண்டனை சிறைக் கைதி தி.சுபாஷ் காந்தி 546 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அதே சிறைக் கைதி சீ.ராஜேந்திரனும், புழல் பெண்கள் சிறப்பு சிறைக் கைதி மு.சண்முகப்பிரியாவும் 536 மதிப்பெண்கள் பெற்றுஇரண்டாமிடத்தையும், புழல் தண்டனை சிறைக் கைதி ஹ.ஜாகிா் உசேன் 528 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனா்.

தோ்ச்சி பெற்ற கைதிகளையும், சிறப்பிடம் பிடித்த கைதிகளையும் சிறைத்துறை அதிகாரிகளும், காவலா்களும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com