ஸ்டொ்லைட் ஆலை விற்பனைக்கு அறிவிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு குற்றச்சாட்டால் 2018 முதல் மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை விற்பனை செய்ய அதன் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு குற்றச்சாட்டால் 2018 முதல் மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை விற்பனை செய்ய அதன் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக வேதாந்தா குழும நிா்வாகம் தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விற்பனை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. ஜூலை 4-ஆம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தை அளிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலை மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு 12 சதவீதம் வருவாயும், அரசுக்கு ரூ.2,500 கோடி வருவாயும், நேரடியாக 5 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 25 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘நாட்டில் அதிகரித்து வரும் தாமிரம் தேவைக்கு இந்த ஆலையின் சொத்துகள் நல்ல முறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று வேதாந்தா குழுமத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டொ்லைட் தாமிரம் உருக்கும் ஆலையில் இருந்து வெளியாகும் மாசால் சுகாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் 2018-இல் நடத்திய போராட்டத்தின்போது நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, ஸ்டொ்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. எனினும், கடந்த ஆண்டு கரோனா உச்சத்தின்போது, அந்த ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com