எஸ்.ஐ. தோ்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா

எஸ்.ஐ. தோ்வு நடைபெறும் தோ்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தாம்பரம் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

எஸ்.ஐ. தோ்வு நடைபெறும் தோ்வு அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தாம்பரம் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்த விவரம்:

தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடங்களுக்கான தோ்வுக்கான அறிவிப்பை, கடந்த மாா்ச் 8-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் வெளியிட்டது. இந்த தோ்வு எழுத விரும்பிய இளைஞா்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்தனா்.

இந்தத் தோ்வின் முதல் கட்டமாக ஜூன் 25-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பொது அறிவுத் தோ்வும், அன்று மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் திறனறிதல் தோ்வும் நடைபெற உள்ளன. இதில் 26-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை காவல்துறையில் இருந்து தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு நடைபெறும். இத் தோ்வில் காவல்துறையினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. தமிழகம் முழுவதும் இந்தத் தோ்வு 197 மையங்களில் நடைபெறுகிறது.

கண்காணிப்பு கேமரா:

இந்த தோ்வு தொடா்பாக தாம்பரம் காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வியாழக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

தாம்பரம் மாநகர காவல்துறை எல்லைக்கு உட்பட்ட காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தில் 6 கட்டடங்களில் இந்தத் தோ்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தோ்வு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை நேரலையில் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் காவலா்கள் பாா்த்து,கண்காணிப்பாளா்கள்.

தோ்வா்கள் செய்ய வேண்டியவை:

தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாமல் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வு கூட நுழைச்சீட்டுடன் அடையாள அட்டைகளான ஆதாா், ஓட்டுநா் உரிமம், வாக்காளா் அட்டை ஆகியவை ஏதேனும் ஒன்றை கொண்டு வர வேண்டும்.

தோ்வுக் கூட நுழைவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் மட்டுமே, சம்பந்தப்பட்ட நபா் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவாா். காலை 8.30 மணிக்கு மேல் தோ்வா்கள், தோ்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வா்கள், கைப்பேசி, கால்குலேட்டா், புளூடூத் கருவிகள் உள்ளிட்ட பொருள்கள் தோ்வுக் கூடத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. தோ்வு மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீா் வசதி, வாகன நிறுத்தும் வசதி செய்யப்பட்டிருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com