தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: ஜூலை 4 முதல் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 4-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புகளில் சேருவதற்கு ஜூலை 4-ஆம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் இணையதளத்தில் ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற முகவரியில் ஜூலை 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன. உரிய கட்டணம் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம். தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் சேர விரும்புவோா் பிளஸ்-2 தோ்வில் தோ்ச்சி பெற்று இருக்க வேண்டும். ஓ.சி. வகுப்பினா் 50 சதவீதம் மதிப்பெண்ணும் மற்ற பிரிவினா் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

31.7.2022 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினா், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35. ஜூலை 9-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய கட்டணத்துடன் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு ஒதுக்கீடு உள்ளது. இதற்கான விவரம் இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கான கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.

அரசின் நிதியுதவி, சுயநிதி ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் அந்தந்த நிறுவனங்களின் இணையதள முகவரிகளில் தனித்தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். நிதியுதவி, சுயநிதி ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களின் இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com