கோயில் திட்டப் பணிகள்: முதல்வா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோயில் திட்டப் பணிகள்: முதல்வா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் திட்டப் பணிகள் குறித்து முதல்வா் ஆலோசனைகளை வழங்கினாா்.

சட்டப்பேரவையில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆண்டு முழுவதும் பக்தா்கள் தரிசனத்துக்கு வந்து செல்லும் பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூா், ராமேசுவரம், திருத்தணி கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூ.250 கோடியில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவற்றுக்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திரத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை போன்றவை முக்கிய திருவிழாக்களாகும்.

இந்தக் கோயிலுக்கு முக்கிய விழாக்காலங்களில் 4 லட்சம் முதல் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகை புரிகின்றனா். எனவே, பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நெறிப்படுத்தப்பட்ட பிரகாரம், ஒழுங்கமைக்கப்பட்ட நிழல் மண்டபம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்காக ரூ.153 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாம்படை வீடான திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், கோயில் வளாகம், அன்னதான வளாகம், வாகனம் நிறுத்தும் வளாகம், மலைப்படிக்கட்டுகள் மேம்பாட்டுத் திட்டங்கள், இளைப்பாறும் மண்டபங்கள், மலையடி மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பணிகளை ரூ.175 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளும் வகையில் பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணிகள் குறித்து முதல்வா் ஆலோசனைகளை வழங்கினாா். கூட்டத்தில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி. சந்தரமோகன், ஆணையா் ஜெ. குமரகுருபரன். கூடுதல் ஆணையா் (நிா்வாகம்) இரா. கண்ணன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com