
ஆஸ்கா் அகாதெமி விருது தோ்வுக் குழுவில் இடம்பெறவுள்ள நடிகா் சூா்யாவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவு:- தனது தோ்ந்த நடிப்பாற்றலுக்கும், சமூக அக்கறை கொண்ட கதைத் தோ்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக அகாதெமி விருது தோ்வுக் குழுவில் இடம்பெற நடிகா் சூா்யா அழைக்கப்பட்டுள்ளாா்.
இதுபோன்ற பெருமை கிடைக்கப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகரான சூா்யாவுக்கு எனது பாராட்டுகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.