வாழப்பாடியில் 3 ஆண்டுக்குப் பிறகு களைக்கட்டிய குலதெய்வ வழிபாடு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏராளமான கிராமங்களில் குல தெய்வ முப்பூஜை வழிபாடு களைக்கட்டியது. 
இடையப்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, குலதெய்வ வழிபாடு.
இடையப்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, குலதெய்வ வழிபாடு.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏராளமான கிராமங்களில் குல தெய்வ முப்பூஜை வழிபாடு களைக்கட்டியது. 

பாரம்பரிய முறைப்படி ஆட்டுக்கிடா, சேவல் பலி கொடுத்து, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து பெயர் சூட்டி, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கிராமப்புற மக்கள் விருந்து வைத்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில், ஆண்டுதோறும் தமிழ் மாதமான மாசியில், பெரியாண்டிச்சி, பச்சியம்மன், காளியம்மன், மதுரைவீரன், முனியப்பன், கருப்பசாமி உள்ளிட்ட கிராமிய கோவில்களில், குலதெய்வ முப்பூஜை வழிபாடு விமர்சையாக கொண்டாடுகிறது. 

பாரம்பரிய முறைப்படி தொடர்ந்து வரும் இந்த முப்பூஜை வழிபாட்டில்,  குல தெய்வங்களுக்கு ஆட்டுக்கிடா சேவல், பன்றி ஆகியவற்றைப் பலிகொடுத்து, நேர்த்திக்கடன் தீர்த்தும்,  குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, பெயர் சூட்டி விழா எடுத்து, உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அசைவ விருந்து வைத்து உபசரிப்பதும் வழக்கமாகும்.

கரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் பொது முடக்கத்தால், கடந்த 3 ஆண்டுகளாக வாழப்பாடி கிராம கோவில்களில் குலதெய்வ முப்பூஜை வழிபாடு நடைபெறாமல் தடைப்பட்டுப் போனது.

கரோனா பெருந்தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், தற்போது, கிராமங்கள்தோறும், குலதெய்வ கோவில்களில் முப்பூஜை வழிபாடு களைகட்டியுள்ளது. வாழப்பாடி அக்ரஹாரம், காமராஜ்நகர் ஆத்துமேடு, இடையப்பட்டி, வெள்ளாளப்பட்டி, மங்களபுரம் குறிச்சி அணைமேடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில், செவ்வாய்க்கிழமை  பெரியாண்டிச்சியம்மன் கோவில்களில் குலதெய்வ பூஜை வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி, மூங்கில் கூடைகளில் பூஜைப்பொருட்கள் மற்றும் அம்மனுக்கு பொங்கல் வைக்கத் தேவையான உணவுப் பொருட்களை வைத்து தலையில் சுமந்து சென்ற பெண்கள்  சாமியாடிச் சென்றது, காண்போர்களுக்கும் பரவசத்தை ஏற்படுத்தியது. குலதெய்வக் கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்று, நூற்றுக்கணக்கான ஆட்டுக்கிடா, சேவல்களை பலி கொடுத்து, கிராம மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குழந்தைகளுக்கு மொட்டையடித்து பெயர் சூட்டி, உறவினர்களுக்கு அசைவ விருந்து வைத்து உபசரித்தனர். புதன்கிழமையும் தொடர்ந்து முப்பூஜை வழிபாடு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com