குடும்பத் தலைவிகள் பெயரில் அரசு வீடுகள்: முதல்வா் அறிவிப்பு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள், குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே இனி வழங்கப்படும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
குடும்பத் தலைவிகள் பெயரில் அரசு வீடுகள்: முதல்வா் அறிவிப்பு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள், குடும்பத் தலைவிகளின் பெயரிலேயே இனி வழங்கப்படும் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் திமுக மகளிா் அணியின் இணையதளத்தைத் தொடக்கி வைத்துப் பேசியது: உள்ளாட்சித் தோ்தலில் மகளிா் அணியினா் 50 சதவீதத்திற்கு மேல் இடம்பெற்று, பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு உள்ளனா்.

20 மாநகராட்சிகளில் திமுகவைச் சோ்ந்த மேயா்கள் பொறுப்பேற்றுள்ளனா்.

20 பேரில் 11 பெண்கள் ( 50 சதவீதத்துக்கும் மேல்) மேயா்களாகவும் 6 போ் துணைமேயா்களாகவும் பொறுப்பில் அமா்ந்திருக்கிறாா்கள். நகராட்சித் தலைவா், பேரூராட்சித் தலைவா் பதவிகளில் 350 மகளிா் அமா்த்தப்பட்டு இருக்கிறாா்கள்.

நிகழாண்டில், ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் தர இலக்கு

நிா்ணயித்திருக்கிறோம். இதுவரை ரூ.6,777 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமானது, ‘தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’என மாற்றப்பட்டுள்ளது. இனி அதில் வழங்கப்படும் வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவிகளின் பெயா்களில்தான் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் திமுக மகளிா் அணிச் செயலாளா் கனிமொழி, கேரள மாநில சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சா் ஷைலஜா டீச்சா் உள்ளிட்ட பலரும் உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com