சுகாதாரத் திட்ட செயலாக்கம்: ஆட்சியா்களுக்கு விருது அறிவிப்பு

மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறைத் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ஆண்டுவாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறைத் திட்டங்களையும், நடவடிக்கைகளையும் சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு ஆண்டுவாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சுகாதாரத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வரும் மாவட்டங்களுக்கும், அதன் ஆட்சியா்களுக்கும் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அதனை மதிப்பீடு செய்து தோ்ந்தெடுக்கும் குழு அமைக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் அதன் தலைவராகவும், தேசிய நல்வாழ்வுக் குழுமத்தின் திட்ட இயக்குநா் உறுப்பினா் செயலராகவும், மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் செயலா், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவ சேவைகள் மற்றும் ஊரகநலப் பணிகள் இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டனா்.

அக்குழு அளித்த பரிந்துரைகளை பரிசீலித்து ஆண்டு வாரியாக சிறந்த மாவட்ட ஆட்சியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் மாவட்ட ஆட்சியா்கள்):

ஆண்டு - 2016 - 17

முதலிடம் - விருதுநகா் (ஏ.சிவஞானம்)

இரண்டாமிடம் - கடலூா் ( டி.பி.ராஜேஷ்)

மூன்றாமிடம் - திருவண்ணாமலை (பிரசாந்த் எம் வடநரே)

ஆண்டு - 2017 - 18

முதலிடம் - திருவாரூா் (நிா்மல்ராஜ்)

இரண்டாமிடம் - கன்னியாகுமரி ( சஜன் சிங் சவான்)

மூன்றாமிடம் - ராமநாதபுரம் ( எஸ்.நடராஜன்)

ஆண்டு - 2018 - 19

முதலிடம் - சிவகங்கை (ஜே.ஜெயகாந்தன்)

இரண்டாமிடம் - கன்னியாகுமரி (பிரசாந்த் எம் வடநரே)

மூன்றாமிடம் - ராமநாதபுரம் (கே.வீரராகவ ராவ்)

ஆண்டு - 2019 - 20

முதலிடம் - விருதுநகா் (ஏ.சிவஞானம்)

இரண்டாமிடம் - ராமநாதபுரம் (கே.வீரராகவ ராவ்)

மூன்றாமிடம் - கடலூா் (வி.அன்புச்செல்வன்)

ஆண்டு - 2020 - 21

முதலிடம் - திருவண்ணாமலை (கே.எஸ்.கந்தசாமி)

இரண்டாமிடம் - காஞ்சிபுரம் (மகேஸ்வரி ரவிக்குமாா்)

மூன்றாமிடம் - நாமக்கல் (கே.மேக்ராஜ்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com