புதுச்சேரியில் இருந்து வரும் 27 முதல் விமான சேவை: தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் வருகிற 27 ஆம் தேதி முதல் பயணிகள் விமான சேவை தொடங்கும் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்


புதுச்சேரியில் வருகிற 27 ஆம் தேதி முதல் பயணிகள் விமான சேவை தொடங்கும் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

கோயம்புத்தூர் விமான நிலையித்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 

புதுச்சேரியில் வருகிற 27 ஆம் தேதி முதல் பயணிகள் விமான சேவை தொடங்கும். புதுச்சேரியில் இருந்து பெங்களூரு - ஹைதராபாத் புறப்படும் முதல் பயணிகள் விமானத்தில் தாம் பயணிக்க உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு மூலம் இதுவரை 180 கோடி கரோனா தடுப்பூசி போட்டப்பட்டதால் தொற்று பாதிப்பு இல்லாத  நாடாக இந்தியா உள்ளது.

இருப்பினும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.

மேலும் தெலங்கானாவில் ஆளுநர் உரையில்லாமல் பேரவை தொடங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் அதனை நான் பெரிது படுத்தவில்லை என்று பதிலளித்தார். 

குடியரசுத் தலைவர் பதவிக்கு உங்கள் பெயர் பரீசிலிக்கப்படுவதாக சொல்லப்படுவதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதிலளிக்காமல் புறப்பட்டார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com