மக்கள் பிரச்னைகளுக்கு கூடுதல் நிதி: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

மக்கள் பிரச்னைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

மக்கள் பிரச்னைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது:

அதன் விவரம்: வேலை உறுதி திட்டத்தை அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுப்படுத்திடவும் அதற்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகப்படுத்திடவும் வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு 73 மாதங்களாக வழங்கப்படாத பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும். பஞ்சு, இரும்பு, தாமிரம் உள்ளிட்ட மூலப்பொருள்களை கொள்முதல் செய்து குறு, சிறு நிறுவனங்களுக்கு சலுகை விலையில் அரசு வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.3,000, தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும் மாவட்டங்களின் பாதுகாப்புக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இது போன்ற மக்கள் பிரச்னைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com