6 வழிச்சாலையாக மாறும் ஈசிஆர்: மேலும் பல அதிரடி அறிவிப்புகள்

தமிழகத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட கிழக்கு கடற்கரை சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
6 வழிச்சாலையாக மாறும் ஈசிஆர்: மேலும் பல அதிரடி அறிவிப்புகள்
6 வழிச்சாலையாக மாறும் ஈசிஆர்: மேலும் பல அதிரடி அறிவிப்புகள்



தமிழகத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட கிழக்கு கடற்கரை சாலை ஆறு வழிச் சாலையாக மாற்றப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் இன்று,  2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அதில்,

தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலை ரூ.135 கோடி செலவில் 6 வழிச் சாலையாக மாற்றப்படும்.

கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட, அக்கரை வரை நான்குவழிச் சாலையை ஆறுவழிச் சாலையாக  அகலப்படுத்துவது அவசியமாகும். திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் இச்சாலையை அகலப்படுத்துவதற்கு, ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூரில் உள்ள மீதமுள்ள சாலைப் பகுதி 135 கோடி ரூபாய் செலவில் ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்.

மாமல்லபுரத்திற்கு அப்பால் உள்ள கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடர்பான சிக்கல் தீர்க்கப்பட்டு, நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

முக்கியச் சாலையான சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் சந்திப்பில், சந்திப்பில் ரூ.322 கோடியில் சுற்றமைப்புடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

சென்னையின் வர்த்தக வளர்ச்சிக்கு உயிர்நாடியாக திகழக்கூடிய மதுரவாயல் - சென்னை துறைமுகம் உயர்மட்டச் சாலை திட்டத்தை மீட்டெடுத்து,  நிறைவேற்றிட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. இத்திட்டம், 5,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 20.6 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை அடுக்கு உயர்மட்டச் சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், தமிழ்நாடு அரசு, கடற்படை மற்றும் சென்னை துறைமுகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.

மேலும்..


சிங்கார சென்னை திட்டம் 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி,

திறன் மிகு நகரங்கள் திட்டத்துக்கு ரூ.1,875 கோடி,

நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8,737 கோடி,

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு  ரூ.3,700 கோடி ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் புதிதாக  500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும்.

மாணவர்களுக்கான பேருந்து பாஸ் திட்டத்துக்கு ரூ.928 கோடி ஒதுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com