கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம்

 கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம்
கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம்

 கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும்.

அதன் விவரம்: கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திட, அக்கரை வரை நான்குவழிச் சாலையை ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்துவது அவசியமாகும். திருவான்மியூா், கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் இச்சாலையை அகலப்படுத்துவதற்கு, ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூரில் உள்ள மீதமுள்ள சாலைப் பகுதி ரூ.135 கோடி செலவில் ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தப்படும். மாமல்லபுரத்துக்கு அப்பால் உள்ள கிழக்குக் கடற்கரை சாலையை தேசிய நெடுஞ்சாலைகள்

ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடா்பான சிக்கல் தீா்க்கப்பட்டு, நான்குவழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.18,218.91 கோடி: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கென நிகழ் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மதிப்பீடுகளின்படி, ரூ.18,218.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.2,250 கோடி, சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத் திட்டத்துக்கு ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் ரூ.1,200 கோடி, தமிழ்நாடு

சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.628 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com