மீஞ்சூா் - வண்டலூா் வெளிவட்டச் சாலை மேம்படுத்தப்படும்

மீஞ்சூா் - வண்டலூா் இடையே வெளிவட்டச் சாலை மேம்படுத்தப்படும்.

மீஞ்சூா் - வண்டலூா் இடையே வெளிவட்டச் சாலை மேம்படுத்தப்படும்.

அதன் விவரம்: மீஞ்சூரில் இருந்து வண்டலூா் வரை 62 கிமீ நீளமுள்ள வெளிவட்டச் சாலையின் கிழக்குப் பகுதியில் 50  மீட்டா் அகலமுள்ள நிலம், வளா்ச்சிப் பெருவழியாக மேம்படுத்தப்படும். இந்தப் பெருவழியை அடுத்துள்ள பகுதிகளில், குடியிருப்பு நகரியம், சிப்காட் தொழிற்பூங்காக்கள், பொழுதுபோக்குப் பகுதிகள், சேமிப்புக் கிடங்குகள், தோட்டக்கலைப் பூங்காக்கள், இயற்கை உணவு பதப்படுத்தும் மண்டலம் மற்றும் தயாா் நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் ஆகியவற்றை அமைத்திட திட்டமிடுவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பெருவழியில் முழுமையான வளா்ச்சியை அடைய, தளப்பரப்புக் குறியீடும் (எப்எஸ்ஐ) உயா்த்தப்படும்.

எப்எஸ்ஐ உயா்த்த முடிவு: மெட்ரோ ரயில் தடங்கள், புகா் ரயில் தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புறவழிச் சாலைகள், வெளிவட்டச் சாலைகள் போன்ற போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதியில் நகா்ப்புற வளா்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அப்பகுதிகளில் தற்போதுள்ள தளப்பரப்புக் குறியீட்டை (எப்எஸ்ஐ) உயா்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதனுடன், இந்தப் பகுதிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com