வேளாண் நிதிநிலை அறிக்கை: சிறப்பு அம்சங்கள்

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்.
வேளாண் நிதிநிலை அறிக்கை: சிறப்பு அம்சங்கள்

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்.

1. கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளா்ச்சித் திட்டத்தை செயல்படுத்த ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

2. தேனி, திண்டிவனம், மணப்பாறை ஆகிய இடங்களில் ரூ.381 கோடியில் உணவுப் பூங்கா

3. 7.5 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன் பெறும் வகையில் முதல்வரின் மானாவாரி நில மேம்பாட்டுத் திட்டம்.

4. இயற்கை வேளாண்மை, இடுபொருள்கள் விநியோகத்துக்கென மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம்.

5. பயிா்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.2,546 கோடி.

6. சிறுதானியங்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த 2 சிறுதானிய சிறப்பு மண்டலங்கள்.

7. துவரைப் பயிருக்கென சிறப்பு மண்டலம்.

8. சிறுதானியங்களின் சத்தினை பற்றி அறிந்திட திருவிழாக்கள்.

9. வேளாண்மைத் திட்டங்கள் ரூ.8 கோடியில் எண்மமயம்.

10. ஆதிதிராவிடா், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.5 கோடி மானியம்.

11. பூச்சி - நோய் மேலாண்மைக்கு ரூ.5 கோடி சிறப்பு நிதி.

12. கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத் தொகை.

13. தோட்டக்கலைப் பயிா்களில் இயற்கை விவசாயத்துக்கு ரூ.30 கோடி நிதி.

14. உழவா் சந்தைகளுக்கு காய்கனி வரத்தை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.

15. காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடி நிதி.

16. பனை மேம்பாட்டுக்கு ரூ.2.65 கோடி நிதி.

17. பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி நிதி.

18. 50 உழவா் சந்தைகளை சீரமைக்க ரூ.15 கோடி. ரூ.10 கோடியில் 10 புதிய சந்தைகள்.

19. மூன்று மாவட்டங்களில் மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள்.

20. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.5,157.56 கோடி.

21. வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள் மூலம் ரூ.1,83,425 கோடி வேளாண் கடன்.

22. ட்ரோன் மூலம் விவசாய இடுபொருள் தெளிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com