மேக்கேதாட்டு அணை விவகாரம்: பேரவையில் தனித் தீர்மானம்

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மேக்கேதாட்டு அணை விவகாரம்: பேரவையில் தனித் தீர்மானம்

மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இதனை தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து 19ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  

இந்த நிலையில் பேரவையில் இன்று முதல் 3 நாள்களுக்கு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்துள்ளார்.

மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து தனித்தீர்மானம் கொண்டு வந்த அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

“உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி அணை கட்டுவோம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளன. மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்தின் தலைவர்களான தேவகவுடா, குமாரசாமி, எடியூரப்பா என அனைவரும் ஒரே அணி.

தமிழக பேரவையிலும் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என அனைவரும் மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினர். இன்று முதல்வர் ஸ்டாலின் அரசு தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளது.

தமிழக பேரவையிலும், மேக்கேதாட்டு அணைக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்திற்கு திமுகவும், திமுகவின் தீர்மானத்திற்கு அதிமுகவும் இதுவரை ஆதரித்துள்ளது.

தமிழகத்தில் பல ஆறுகள் ஓடினாலும் தண்ணீருக்காக நாம் கை ஏந்தும் நிலையில் உள்ளோம். அண்டை மாநிலத்துடன் நல்லுறவை காக்கும் அதே நேரத்தில்  உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது.

மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை மாற்றாந்தாய் பிள்ளைப் போல் நடத்துகிறார்கள். தண்ணீருக்காக கையேந்தும் நிலையில் உள்ளோம்.

காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பை மதிக்காமல், சமந்தப்பட்ட மாநில அனுமதியையும், மத்திய அரசு அனுமதியையும்  பெறாமல் அணை கட்டும் முயற்சியை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசுக்கு தமிழக பேரவையின் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

இந்த விவகாரத்தில், கர்நாடக அரசுக்கு எந்தவித தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அனுமதியையும் தரக்கூடாது என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர பேரவை உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்”.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com