‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ மூலம் 33,247 பேர் பயன்: பேரவையில் முதல்வர்

‘இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டத்தின்  மூலம் சாலை விபத்தில் சிக்கிய 33,247 பேர் பயனடைந்தாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

‘இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டத்தின்  மூலம் சாலை விபத்தில் சிக்கிய 33,247 பேர் பயனடைந்தாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சேலம் மேற்கு தொகுதி உறுப்பினர் அருள் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் கூறியதாவது:

சாலைகளில் மக்களின் பாதுகாப்பான பயணம் என்பது அரசின் முதன்மையான இலக்காக நிர்ணயம் செய்துள்ளோம். இதற்காக, இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 என்ற உயிர்காக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், சீரான சாலைகள், விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல் 48 மணிநேரம் அவசர சிகிச்சை, சாலை பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

18.12.2020 முதல் 18.3.2022 வரை சாலை விபத்துகளில் சிக்கி அரசு மருத்துவமனைகளில் 29,142 பேர், தனியார் மருத்துவமனைகளில் 4,105 பேர் என மொத்தம் 33,247 பேருக்கு முதல் 48 மணிநேரம் இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ரூ. 29.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே நோக்கம் எனத் தெரிவித்தார்.

மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பவர்களுக்கு ‘நற்கருணை வீரன்’ விருதுடன் ரூ. 5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com