தமிழகத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை என்கிற உத்தரவு தேவை: ஜவாஹிருல்லா

இஸ்லாமிய மாணவிகள் தமிழகத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை என்கிற உத்தரவுகளை முதல்வா் பிறப்பிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா்.
தமிழகத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை என்கிற உத்தரவு தேவை: ஜவாஹிருல்லா

இஸ்லாமிய மாணவிகள் தமிழகத்தில் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை என்கிற உத்தரவுகளை முதல்வா் பிறப்பிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா்.

சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ஜவாஹிருல்லா பேசியது: கா்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் சீருடையுடன் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு பிரச்னை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டம் வழங்கும் கருத்துச் சுதந்திரம், தனியுரிமை சுதந்திரம், மதத்தைப் பின்பற்றும் உரிமை போன்றவை அங்கு மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தின் பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா். ஆனாலும் தமிழகத்தில் சில பள்ளி மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்க முயலும்போது, சில கல்வித் துறை அதிகாரிகளிடம் முறையிட்டு சரி செய்துள்ளோம். இந்தச் சூழலிலும் தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடையில்லை என்பதற்கான உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைக்கப்பட்டது மகிழ்ச்சி. மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்குத்தான் உண்டு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. திமுக ஆட்சியில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவா் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

சுதந்திரம் வேண்டும்: ஒரு கோரிக்கை. கலைவாணா் அரங்கில் பேரவைக் கூட்டம் நடைபெற்றபோது மிக சுதந்திரமாக இருந்தோம். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறோம். இந்த அவையில் சுதந்திரமாகக் கருத்து சொல்லும் வாய்ப்பு இருக்கிறது. சுதந்திரமாக, நெருக்கடி இல்லாமல் இருக்கைகளுக்குச் சென்று வரும் சுதந்திரமும் வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com