வரும் 27-இல் வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா 

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடித்திருவிழா வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெறவுள்ளது.
வலங்கைமான் மகாமாரியம்மன்.
வலங்கைமான் மகாமாரியம்மன்.


நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடித்திருவிழா வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெறவுள்ளது.

வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் எழுந்தருளியுள்ளது மகாமாரியம்மன் கோயில்.இக்கோயில் அம்மனை சீதளாதேவி எனவும் அழைப்பர்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டும் பங்குனித்திருவிழாவையொட்டி கடந்த 11ம் தேதி பூச்சொரிதல் விழாவும்,13 ஆம் தேதி காப்புக் கட்டுதல் 20 ஆம் தேதி திருவிழா தொடக்கமும் நடந்தது. நாள்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது.

வரும் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடித்திருவிழா நடைபெறவுள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உயிர்போகும் நிலையில் உள்ளவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றினால் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறேன் என அம்மனிடம் வேண்டுதல் செய்து கொள்வார்கள்.

அதன்படி, உயிர்பிழைத்தவுடன் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள். அன்றையதினம் ஏராளமானோர் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவதை காணமுடியும். 

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் அரசின் பல்வேறு துறைகளும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட போலீசாரும், விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரமணி, செயல்அலுவலர் ரமேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர். 

இக்கோயிலில் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புஷ்பப்பல்லக்கு விழாவும், ஏப்ரல் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைஞாயிறு திருவிழாவும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com