நகைக் கடன் தள்ளுபடிக்கு ரூ. 1,000 கோடி விடுவிப்பு: அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேரவையில் தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி
கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி பேரவையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த 18ஆம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 19ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து, பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி நேரம் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை அமைச்சர் ஐ. பெரியசாமி பேசியதாவது:

“தமிழகத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ. 1,000 கோடி நேற்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,48,000 நகைக் கடன்கள் தள்ளுபடி செய்து ரசீது தரப்பட்டுள்ளன.

மார்ச் 31ஆம் தேதிக்குள் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியிருந்தேன். ஆனால், 3 நாள்கள் முன்னதாக மார்ச் 28ஆம் தேதியே அனைவருக்கும் தள்ளுபடி ரசீதுகள் தரப்படும் என நம்புகிறேன்” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com