உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ஆப்டோமெட்ரிக் அசோசியேஷன் ஆஃப் தமிழ் நண்பர்கள் சார்பில் மயோபியா பார்வைக் குறைபாடு தொடர்பான விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சியில் குறுந்தகட்டை வெளியிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: ஆப்டோமெட்ரிக் அசோசியேசன் ஆஃப் தமிழ் நண்பர்கள் சார்பில் மயோபியா பார்வைக் குறைபாட்டால் (கிட்டப் பார்வை) தூரப்பார்வை மங்கலாகத் தெரியும். இந்த கிட்டப் பார்வை பாதிப்பு சில ஆண்டுகளாக 2 அல்லது 3 மடங்காக உயர்ந்துகொண்டே செல்கிறது.
 2050-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகையில் சராசரியாக 50 சதவீதம் பேரை இந்தப் பார்வைக் குறைபாடு தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அச்சுறுத்தலிலிருந்து விடுபட நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் இந்த குறுந்தகட்டின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்று அவற்றை மத்திய அரசின் அமைச்சரை சந்தித்து அவர்களுக்கான எதிர்கால கல்விக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கிறோம். மினி கிளினிக் என்பது ஒரு ஆண்டுக்காக ஏற்படுத்தப்பட்டது. அதில், அரசுப் பணிகளில் சேருவதற்கான எந்த ஒரு விதிமுறைகளையும் கடைப்பிடிக்கவில்லை.
 இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, மனிதாபிமான அடிப்படையில் தேவையான ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்கள், நாடுகளில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே, இன்னும் 3 மாதங்களுக்கு கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com