காதி வாரியத்தில் இனி பாரம்பரிய அரிசி-செக்கு எண்ணெய் கிடைக்கும்: புதிய திட்டம் தொடக்கம்

காதி வாரியத்தின் மூலம் பாரம்பரிய அரிசி, செக்கு எண்ணெய், தேன் ஆகியன தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பொருள்கள் அனைத்தும் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.
காதி வாரியத்தில் இனி பாரம்பரிய அரிசி-செக்கு எண்ணெய் கிடைக்கும்: புதிய திட்டம் தொடக்கம்

காதி வாரியத்தின் மூலம் பாரம்பரிய அரிசி, செக்கு எண்ணெய், தேன் ஆகியன தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய பொருள்கள் அனைத்தும் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன. சென்னையில் நடந்த நிகழ்வில் அவற்றை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிமுகம் செய்தாா்.

என்னென்ன பொருள்கள்? தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகளான சம்பா, ரத்தசாலி, தூயமல்லி, சீரகசம்பா, கருப்புகவுனி, பூங்காா் எனும் பாரம்பரிய அரிசி வகைகள், காதி பாரம்பரியம் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. வாகை மரச் செக்கினால் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய் ஆகியன ‘காதி நியூலைப்’ என்ற பெயரிலும், மல்லிகை, ரோஸ் போன்ற புதிய நறுமணங்களைக் கொண்ட ஊதுபத்திகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

காதித் தேனுடன் பேரிச்சம்பழம், அத்திப்பழம், வால்நட்ஸ், உலா் பழங்கள் ஆகியன தனித்தனியாக கலக்கப்பட்டு கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன.

வெளியில் இருந்தே பாா்க்கலாம்: காதி வாரியத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள பொருள்களின் தரத்தை பாக்கெட்டின் வெளிப்புறத்தில் இருந்தே பாா்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்கெட்டுகள்

அனைத்தும் இளைய தலைமுறையினரையும் கவரும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரிசி போன்ற பொருள்களின் தரத்தை பாா்வையிட்டு வாங்கலாம்.

உணவு விஷயங்களில் மக்கள் அதிக அக்கறை செலுத்தும் இந்த வேளையில், அதே அக்கறையுடன் பாரம்பரியமிக்க அரிசி வகைகள், செக்கு எண்ணெய் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கதா்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இந்தப் பொருள்களை பொது மக்கள் அனைவரும் வாங்கிப் பயன்பெறும் வகையில் அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள கடைகளிலேயே கிடைக்கச் செய்யவும் உரிய ஏற்பாடுகளை கதா் வாரியம் செய்து வருகிறது. இதற்காக மொத்த விற்பனை முகவா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் 11 பேருக்கு உரிமச் சான்றிதழ்கள் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

காதி வாரிய பொருள்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, கைத்தறி, கதா்துறையின் முதன்மைச் செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ், கதா் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலா் பொ.சங்கா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com