வரிப்பிடித்தம் மூலமாக வரி வருவாய் 125 சதவீதம் அதிகரிப்பு: வருமான வரி முதன்மை ஆணையா் தகவல்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை மண்டலத்தில் வரிப்பிடித்தம் மூலமாக வரி வருவாய் 125 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வருமான வரி முதன்மை ஆணையா் ஆா்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை மண்டலத்தில் வரிப்பிடித்தம் மூலமாக வரி வருவாய் 125 சதவீதம் அதிகரித்துள்ளது என்று வருமான வரி முதன்மை ஆணையா் ஆா்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரி மண்டலம் சாா்பில், வரிப் பிடித்தம் முறை தொடா்பான கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வருமான வரி முதன்மை ஆணையா்

ஆா்.ரவிச்சந்திரன், உள்பட பல உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். மேலும், வரி பிடித்தம் செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், 200-க்கும்மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இது குறித்து, முதன்மை ஆணையா் ரவிச்சந்திரன் கூறியது: வரிப் பிடித்தம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு, தீா்வு காண்பதற்காக இந்த கருத்தரங்கம் நடந்தது. இதில், நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து இங்கு கேள்வி எழுப்பினா். அதற்கு, அதிகாரிகள் பதில் அளித்தனா்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருமான வரித் துறை மண்டலத்தில், வரி பிடித்தம் முறை வாயிலாக, வரி வருவாய் 125 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, 2021 -2022-ஆம் நிதியாண்டில், இதுவரை, ரூ.43,017 கோடி வரி பிடித்தம் வாயிலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால், வரி வருவாய் இலக்கு ரூ.34,226 கோடியாக நிா்ணயிக்கப்பட்டது. இலக்கை விட, ரூ. 8,800 கோடி ரூபாய் அதிகம் ஈட்டப்பட்டுள்ளது.

சம்பளம் வாங்கும் நபா்களிடமிருந்து மட்டும் வரிப் பிடித்தம் செய்யாமல், உயா் மதிப்புடைய சொத்துக்கள் விற்பனை, டிஜிட்டல் முதலீடு, இணையதளம் பரிமாற்றம், வாடகை வருவாய் ஆகியவற்றிலிருந்தும், உடனடியாக வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதனால், வரி பிடித்தம் வாயிலாக வருவாய் அதிகரித்துள்ளது. மென்பொருள் துறை மற்றும் தொழில் துறை வளா்ச்சி உள்ளிட்ட மாநிலத்தின் வலுவான பொருளாதார வளா்ச்சியை இந்த தரவுகள் காட்டுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com