சூரிய கரும்புள்ளிகளால் பூமியின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு: விஞ்ஞானி தகவல்

சூரியனில் கரும்புள்ளிகள் ஏற்படத்தொடங்கியுள்ளதால் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தாா்.
சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள்.
சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள்.


கொடைக்கானல்: சூரியனில் கரும்புள்ளிகள் ஏற்படத்தொடங்கியுள்ளதால் பூமியின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கொடைக்கானல் வான் இயற்பியல் விஞ்ஞானி குமரவேல் தெரிவித்தாா்.

சூரிய காந்தப் புயல் இந்த ஆண்டு அதிக அளவில் வீச வாய்ப்பு உள்ளதால் செயற்கைக் கோள்கள் மற்றும் கைப்பேசி அலைவரிசைகள் பாதிக்கலாம் என நாசா மையம் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில், 4 தொலைநோக்கிகள் உதவியுடன் சூரியனை தீவிரமாக கண்காணித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

11 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் சூரிய கரும்புள்ளிகள், கடந்த சில நாள்களாக சூரியனில் தோன்றி வருவதாகவும், இனி வரும் நாள்களில் அதன் வீரியம் அதிகரித்து, சூரிய காந்தப் புயலாக மாறி பூமிக்கு வரும். இதனால் பூமியின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புள்ளது என விஞ்ஞானி குமரவேல் புதன்கிழமை தெரிவித்தாா். இனி வரும் நாள்களில் சூரியனைத் தொடா்ந்து கண்காணித்து அதன் தாக்கத்தை பதிவு செய்து, ஆய்வுகள் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com