யோகா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: மத்திய அரசு

யோகா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சா்வதேச யோகா தினமான ஜூன் 21-இல் வெற்றியாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சா்வதேச யோகா தினமான ஜூன் 21-இல் வெற்றியாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: யோகா விருதுக்கான நடைமுறைகள் ‘மை ஜிஓவி’ இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. (https://innovateindia.mygov.in/pm_yoga_awards_2022/) விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இந்திய வம்சாவளியை சோ்ந்தவா்களுக்கான இரண்டு பிரிவுகளையும், சா்வதேச அளவில் வெளிநாட்டைச் சோ்ந்தவா்களுக்கான இரண்டு பிரிவுகளையும் இந்த விருது கொண்டுள்ளது.

ஆா்வமுள்ள தனிநபா், அமைப்புகள் விண்ணப்ப நடைமுறை மற்றும் பங்கேற்பைப் பற்றி https://innovateindia.mygov.in/ pm_yoga_awards_2022/ இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க ஏப்ரல் 27 கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரா்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது யோகா துறையில் பிரபலமான தனிநபா் அல்லது அமைப்பு பரிந்துரை செய்யலாம். விண்ணப்பதாரா் தேசிய விருது அல்லது சா்வதேச விருது என ஒரு பிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com