நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்தில் ஏறமுடியாமல் தவிக்கும் பள்ளி மாணவ, மாணவிகள்

நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்தில் ஏறமுடியாத பள்ளி மாணவ, மாணவிகள் ஷேர் ஆட்டோவில் செல்ல வசதியில்லாத மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்தபிறகு வரும் பேருந்தில் தாமதமாக பள்ளிக்கு செல்லுகிறார்கள், சிலர் வீட்ட
தருமபுரியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.
தருமபுரியில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி  பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்.

தருமபுரி: நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்தில் ஏறமுடியாத பள்ளி மாணவ, மாணவிகள் ஷேர் ஆட்டோவில் செல்ல வசதியில்லாத மாணவர்கள் பள்ளி நேரம் முடிந்தபிறகு வரும் பேருந்தில் தாமதமாக பள்ளிக்கு செல்லுகிறார்கள், சிலர் வீட்டிற்கு திரும்பி செல்கிறார்கள்.

காலை 8.மணி முதல் 10 மணி வரை வரும் அனைத்து பேருந்துகளும் நெரிசலோடு தான் வருகிறது. அப்படி வரும் பேருந்துகளில் நேரம் இன்மை காரணமாக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பேருந்தில் பள்ளிக்கு செல்கின்றனர். மாணவிகள் அப்படி செல்லமுடியாததால் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். 

நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்தில் ஏற முடியாமல் தவிக்கும் மாணவிகள்.

அப்படி காத்திருந்தும் பள்ளி நேரத்திற்குள் பேருந்தில் இடம் கிடைப்பதில்லை. இதனால் சில மாணவிகள் ஷேர் ஆட்டோக்களில் செல்கின்றனர். அப்படி ஷேர் ஆட்டோவில் செல்ல வசதியில்லாத மாணவர்கள் பள்ளி நோம் முடிந்தபிறகு வரும் பேருந்தில் தாமதமாக பள்ளிக்கு செல்லுகிறார்கள், சிலர் வீட்டிற்கு திரும்பி செல்கிறார்கள். பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் சிலர் விபத்தில் சிக்குகின்றனர். 

அரசு பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மாணவிகள்

இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க, அரசு பள்ளி நேரத்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் பயணிக்க தனி பேருந்து இயக்கினால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். மக்கள் நலனில் அங்கரையுள்ள அரசு மகளிருக்கு இலவசப் பயணச் சலுகை அளித்தது போல், பள்ளி மாணவர்களுக்கு தனி பேருந்து இயக்கினால் நலன் பயக்கும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com