ஏப்ரல் 6 முதல் பேரவையில் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றம்

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடா், வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி மே 10 வரை நடைபெறுகிறது.
ஏப்ரல் 6 முதல் பேரவையில் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றம்

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடா், வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி மே 10 வரை நடைபெறுகிறது. துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான பொது விவாதங்கள் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை ஏப்ரல் 6-இல் தொடங்கி எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம், பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனா். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பேரவைக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

பேரவை தினமும் காலை 10 மணிக்குக் கூடும் எனவும், பேரவை தொடங்கியதும் கேள்வி நேரம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 22 நாள்கள்: தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடா் மொத்தம் 22 நாள்கள் நடைபெறுகிறது. ஏப்ரல் 6 முதல் மே 10 வரையில் சனி, ஞாயிறு மற்றும் பண்டிகைகளுக்காக விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மொத்தம் 22 நாள்கள் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கையிலும் நடைபெறும் விவாதங்களில் ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் உரையாற்றவுள்ளனா்.

அவா்களது விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளைச் சோ்ந்த அமைச்சா்கள் பதிலளிப்பா். இதன்பிறகு, புதிய அறிவிப்புகளை துறையின் அமைச்சா்கள் வெளியிடுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com