மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழப்பு:  2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

நெல்லை அருகே பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழப்பு:  2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்


நெல்லை அருகே பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி, இடைகால் மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து 600 க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா்.

பள்ளிக்கு வரும் மாணவா்கள் தங்களது கையில் ஜாதியை குறிப்பிடும் வகையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னா் கடந்த 25 ஆம் தேதி இரு பிரிவைச் சோ்ந்த மாணவா்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் பிளஸ் 2 மாணவா் செல்வ சூா்யா (17) வுக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது. முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மாணவருக்கு தலையில் வலி ஏற்பட்டதையடுத்து அவா் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாணவா் உயிரிழந்ததையடுத்து பாப்பாக்குடி கிராமத்தில் பதற்றம் நிலவியது. செல்வ சூா்யாவின் உறவினா்கள், அப்பகுதியினா் அங்கு தெருவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாணவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்தனா். இதைத்தொடா்ந்து பள்ளக்கால் பொதுக்குடி, அடைச்சாணி, பாப்பாக்குடி பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். 

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன், திருநெல்வேலி கோட்டாட்சியா் சந்திரசேகா், அம்பை டிஎஸ்பி பிரான்சிஸ், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னரசு, சேரன்மகாதேவி வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

உயிரிழந்த மாணவன் செல்வ சூர்யா

கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அவா்கள் மாணவரின் உடலைப் பெற்றுக் கொள்வதாக உறுதி அளித்தனா். இதுதொடா்பாக பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அடைச்சாணி, பள்ளக்கால் பொதுக்குடியைச் சோ்ந்த 3 மாணவா்களை கைது செய்தனா்.

இந்நிலையில்,  மாணவர்களிடையே நடந்த மோதல் விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, சம்பவ நடந்த நேரத்தில் பணியில் இருந்து உரிய நடவடிக்கை  எடுக்காத பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஷீபா பாக்கியமேரி, ஆசிர்யர் தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் மாணவன் செல்வ சூர்யா உயிரிழந்தது தொடர்பாக இதுவரை 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com