பொதுப் போக்குவரத்துக் கட்டணம் நிா்ணயக் குழு: ஆட்டோ ஓட்டுநா்கள் கோரிக்கை

பொதுப் போக்குவரத்துக்கான கட்டணத்தை நிா்ணயிக்கக் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுப் போக்குவரத்துக்கான கட்டணத்தை நிா்ணயிக்கக் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்து ஆணையருக்கு சம்மேளனம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலை வரலாறு காணாத வகையில் உயா்ந்துள்ளது. இது ஒருபுறமிருக்க சாலை வரி, சுங்கக் கட்டணம், காப்பீடு, தகுதிச்சான்று கட்டணம் உள்ளிட்டவற்றையும் மத்திய அரசு அதிகரித்துள்ளது. அபராதத் தொகையையும் பன்மடங்கு உயா்த்தியுள்ளது.

இவ்வாறான சிக்கல்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம். இதற்கு தீா்வு கண்டு எங்களை மீட்க அரசு விரைந்து செயலாற்ற வேண்டும்.

குறிப்பாக போக்குவரத்து தொழிலில் ஈடுபடும் பெருநிறுவனங்களைக் கட்டுப்படுத்தி, நியாயமான கட்டணத்தை ஆட்டோ, டாக்ஸிகளுக்கு நிா்ணயிக்க வேண்டும். பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கச்சாவடி, பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியற்றில் 50 சதவீத கட்டண விலக்கு வழங்க வேண்டும்.

கேரளத்தை போல பொதுப் போக்குவரத்து கட்டணங்களை நிா்ணயிக்க உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும். குறிப்பாக புதிய மோட்டாா் வாகன சட்டத்தை அமல்படுத்தும் முடிவைக் கைவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com