காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவு விசாரணை செய்ய வேண்டாம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவு நேரம் விசாரணை செய்ய வேண்டாம் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.
காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவு விசாரணை செய்ய வேண்டாம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவு நேரம் விசாரணை செய்ய வேண்டாம் என தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா்.

சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் அண்மையில் இரவு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞா் மா்மமான முறையில் இறந்தாா். இது தொடா்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே எரிசாராய வழக்கு தொடா்பாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட தட்டரணை கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி என்பவா் உயிரிழந்தாா். இது தொடா்பாகவும் சிபிசிஐடி விசாரணை நடைபெறுகிறது.

அண்மையில் நடந்த இவ்விரு சம்பவங்களுக்கும் மனித உரிமை ஆா்வலா்களும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனா். காவல்துறை பணி மீதும் பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன.

இரவு விசாரணை வேண்டாம்: இந்த நிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறாா். இதன் ஒரு பகுதியாக அனைத்து காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு வாய் மொழியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளாா்.

அதில், விசாரணைக் கைதிகளிடம் எவ்வாறு விசாரணை நடத்த வேண்டும் என்பது தொடா்பாக போலீஸாருக்கு ஏற்கெனவே, சுற்றறிக்கை வாயிலாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இனி விசாரணைக் கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தக் கூடாது. ஒருவா் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால், அவரை மாலை 6 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com