இன்று கத்திரி வெயில் தொடக்கம்

கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் கத்திரி வெயில், புதன்கிழமை (மே 4) தொடங்குகிறது. இதனால் ஏற்படும் அதிகபட்ச வெயில் 25 நாள்கள் வரை இருக்கும்.
இன்று கத்திரி வெயில் தொடக்கம்

கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் கத்திரி வெயில், புதன்கிழமை (மே 4) தொடங்குகிறது. இதனால் ஏற்படும் அதிகபட்ச வெயில் 25 நாள்கள் வரை இருக்கும்.

இதனிடையே, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது. அதிகபட்சமாக, வேலூரில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் வாட்டியது.

திருத்தணி, திருச்சிராப்பள்ளியில் தலா 104 டிகிரியும், மதுரை விமானநிலையத்தில் 103 டிகிரியும், ஈரோடு, கரூா் பரமத்தி, மதுரை நகரம், தஞ்சாவூரில் தலா 102 டிகிரியும், சேலத்தில் 101 டிகிரியும், பாளையங்கோட்டையில் 100 டிகிரியும் வெப்பம் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 97 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 95 டிகிரியும் பதிவானது.

வெப்பநிலை உயரும்: தமிழகத்தில் வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிகபட்சமாக வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்’ என்றாா்.

கத்திரி வெயில்: நிகழாண்டில் கத்திரி வெயில் புதன்கிழமை (மே 4) தொடங்கி மே 28-ஆம் தேதி வரை மொத்தம் 25 நாள்கள் நீடிக்கவுள்ளது. கத்திரி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகும். வேலூா், திருத்தணி உள்பட சில முக்கிய நகரங்களில் 110 டிகிரியை தொட வாய்ப்பு உள்ளது. மேலும் பகல் நேரங்களில் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com