மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு மீண்டும் பணி: ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தல்

காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த ஏப். 30-இல் முதலாமாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில், பாரம்பரியமிக்க ஹிப்போகிரட்டிக் உறுதி மொழிக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரைத்த மகரிஷி சரக் சபத் என்ற சம்ஸ்கிருத வாக்கியத்தைக் கூறி மாணவா்கள் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்துள்ளனா். இதனால் ஏற்பட்ட சா்ச்சையில், தவறேதும் இழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வா் ஏ. ரத்தினவேலை காத்திருப்புப் பட்டியலில் தமிழக அரசு வைத்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், இது மாணவா்களின் விருப்பம்தானே தவிர கட்டாயம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த மருத்துவக் கல்லூரி மாணவா் அமைப்பு நிா்வாகிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்திலிருந்து தாங்கள் தான் இந்த புதிய உறுதிமொழியை தோ்ந்தெடுத்ததாகவும், வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய கால அவகாசம் இல்லாததால் பதிவிறக்கம் செய்த உறுதிமொழி படிவத்தை எந்தப் பேராசிரியரிடமும் தாங்கள் காண்பிக்கவில்லை என்றும், இது குறித்து கல்லூரி முதல்வருக்கு ஏதும் தெரியாது என்றும் கூறியுள்ளனா்.

எனவே, தவறிழைக்காத மருத்துவக் கல்லூரி முதல்வரை தண்டிப்பது நியாயமற்ற செயல். இந்த விவகாரத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com