தமிழகத்தில் 40 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை: முதன்மைச் செயலா்

தமிழகத்தில் சுமாா் 40 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாமல் உள்ளதாக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.
கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் சுமாா் 40 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாமல் உள்ளதாக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், துறை அலுவலா்களுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் முன்னிலை வகித்தாா்.

பின்னா், ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:

ஞாயிற்றுக்கிழமை (மே 8) தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் 1.4 கோடி போ் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. சுமாா் 40 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியே செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். கூடுதல் தவணை தடுப்பூசிக்கு தகுதியான 10 லட்சம் முன்களப் பணியாளா்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தற்போது, 1.26 கோடி கரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள் ஸ்ரீசத்யாசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளி மாநிலத்தில் இருந்து வந்த மாணவா்களால் கல்லூரி வளாகத்தில் கரோனா தொற்று பரவல் ஏற்பட்டது முதல் கட்டமாக கண்டறியப்பட்டது.

நோய் பரவல் அதிகரித்த நிலையில் அங்குள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்றுக்குள்ளானவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அங்கு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தக் கல்லூரியில் 71 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்றுக்குள்ளானவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றனா் என்றாா் அவா்.

ஆலோசனைக் கூட்டத்தில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துக்குமரன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ரமாமணி, துணை இயக்குநா் பரணிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com