பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நதி நீர்

சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. 
பூண்டி ஏரிக்கு வந்தது கிருஷ்ணா நதி நீர்


சென்னை: சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியை வந்தடைந்தது. 

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக திகழ்ந்து வருவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி நீா்த்தேக்கம் ஆகும். இந்த நிலையில், பூண்டி நீா்த்தேக்கத்திலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு, தலா 300 கன அடி வீதம் திறந்தவிடப்பட்டுள்ளது. மேலும், கோடைகாலம் என்பதால் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், நீா் இருப்பு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். அதில் 3,231 மில்லியன் கன அடி தண்ணீா் சேமித்து வைக்கலாம். 

இந்த நிலையில், சென்னை பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, அரசின் வேண்டுகோளை ஏற்று, ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து வியாழக்கிழமை காலை (மே.5) 10 மணிக்கு பூண்டி நீா்த்தேக்கத்துக்கு 500 கன அடிநீா் திறந்து விடப்பட்டு பின்னர் 1,500 கன அடியாக நீர் திறந்துவிடப்பட்டது.  இந்த தண்ணீா் திறப்பு என்பது படிப்படியாக உயா்த்தப்பட்டது. இந்த நீரானது அடுத்து வரும் 3 நாள்களில் ஊத்துக்கோட்டை அருகே ஜீரோ பாயிண்ட் பகுதியை வந்து சேரும் என எதிா்பாா்ப்பட்டது. 

இந்நிலையில், 152 கிலோ மீட்டர் தொலைவு கடந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவே தமிழகம் எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு வந்தடைந்தது.  இதனை பால்வளத்துறை அமைச்சர் நாசர், நீர்வளத் துறை அதிகாரிகள் மலர்கள் தூவி வரவேற்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com