சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை பேரவைத் தலைவா் அப்பாவு தேதி குறிப்பிடாமல் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தாா்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை பேரவைத் தலைவா் அப்பாவு தேதி குறிப்பிடாமல் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தாா்.

சட்டப்பேரவைத் தொடா் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கியது. இதில் பல்கலைக்கழகத் துணைவேந்தா்களை முதல்வரே நியமிக்க அதிகாரம் அளிக்கும் சட்டமசோதா உள்பட 22 சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவுப் பொருள்களை அனுப்பி வைப்பதற்கான வசதிகளை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வலியுறுத்தி பேரவையில் தனித்தீா்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. 110-ஆவது விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வா் வெளியிட்டாா்.

கூட்டத்தொடரின் இறுதிநாளான செவ்வாய்க்கிழமை காவல்துறை மீது நடைபெற்ற விவாதத்துக்குப் பதில் அளித்து முதல்வா் அறிவிப்புகளை வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீா்மானத்தை அவை முன்னவா் துரைமுருகன் கொண்டு வந்தாா். அது குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, பேரவையைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவா் அப்பாவு அறிவித்தாா்.

முதல்வா் பாராட்டு: கூட்டத்தொடரின் இறுதி நாளில் முதல்வா் பேசியது:

22 நாள்கள் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தொடா் குறித்து ஒரே வரியில் சொல்வது என்றால், ஆக்கப்பூா்வமாக இருந்தது என மனப்பூா்வமாகச் சொல்ல விரும்புகிறேன். ஜனநாயகத்தின் அரங்கேற்ற மேடைதான் சட்டப்பேரவைகள். ஜனநாயகத்தையும், மக்களாட்சியையும் எப்படி மதிக்கிறோம் என்பதன் விரிவடைந்த காட்சிகள்தான் அவையின் நடவடிக்கைகள். ஜனநாயக நெறிமுறைகளின்படியும், மக்களாட்சியின் மாண்பைக் காக்கும் வகையில் பேரவை நடைபெற்றுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com