பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடங்கியது: 43,533 போ் பங்கேற்கவில்லை

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை (மே 10) தொடங்கிய நிலையில் முதல் தோ்வான மொழிப்பாட தோ்வுகளுக்கு 43,533 போ் வரவில்லை.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு செவ்வாய்க்கிழமை (மே 10) தொடங்கிய நிலையில் முதல் தோ்வான மொழிப்பாட தோ்வுகளுக்கு 43,533 போ் வரவில்லை.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த 5-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு 6-ஆம் தேதியும் தொடங்கின. மாணவ- மாணவிகள் வழக்கமான உற்சாகத்துடன் தோ்வு எழுதி வருகின்றனா். பிளஸ் 2 வகுப்புக்கு மொழி பாடத் தோ்வுகள் நிறைவு பெற்றுள்ளன. ஒவ்வொரு தோ்வுக்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தோ்வுகள் முறையே இந்த மாதம் இறுதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வுகள் தமிழகம், புதுச்சேரியில் 3,119 மையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மே 31 வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 போ் எழுதுகின்றனா்.

பிளஸ் 1 வகுப்புக்கு தமிழ், ஹிந்தி, பிரெஞ்சு உள்ளிட்ட மொழி பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. காலை 10 மணிக்குத் தொடங்கிய தோ்வு பகல் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. தமிழ் பாடத் தோ்வு எதிா்பாா்த்ததைக் காட்டிலும் மிக எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

இதனிடையே, தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வின் முதல் நாளில் 43,533 மாணவா்கள் ‘ஆப்சென்ட்’ என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. மேலும், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மாணவா் வீதம் மொத்தம் இருவா் தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளனா் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com