12 ஊராட்சிகளுக்கு மத்திய அரசு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

மத்திய அரசு விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த 12 ஊராட்சிகளின் தலைவா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினாா். மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சிகளின் தலைவா்கள்
12 ஊராட்சிகளுக்கு மத்திய அரசு விருதுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு

மத்திய அரசு விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சோ்ந்த 12 ஊராட்சிகளின் தலைவா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினாா். மத்திய அரசு விருது பெற்ற ஊராட்சிகளின் தலைவா்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வரை புதன்கிழமை சந்தித்தனா்.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாகச் செயல்படும் ஊராட்சிகளுக்கு மத்திய ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கும், ஊராட்சி ஒன்றிய விருது திருச்சி மாவட்டம்-மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம் மாவட்டம்-மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களுக்கும், கிராம ஊராட்சிக்கான விருது திண்டுக்கல் மாவட்டம் அக்கரைப்பட்டி, கரூா் மாவட்டம் மண்மங்கலம், மதுரை மாவட்டம் சின்னப்பட்டி, கன்னியாகுமரி மாவட்டம் அத்திக்காட்டுவிளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி, புதுக்கோட்டை மாவட்டம் கட்டாத்தி ஆகிய ஊராட்சிகளுக்கும்,

சிறந்த கிராம சபைக்கான விருது ராமநாதபுரம் மாவட்டம், சாத்தனூா் கிராம ஊராட்சிக்கும், கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டத்துக்கான விருது சிவகங்கை மாவட்டம் துவாா் கிராம ஊராட்சிக்கும், குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான விருது நீலகிரி மாவட்டம் குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கும் விருதுகள் அளிக்கப்பட்டன.

விருது பெற்ற ஊராட்சித் தலைவா்களை சென்னை தலைமைச் செயலகத்துக்கு அழைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா். இந்த நிகழ்வின் போது, மாநில ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பெ.அமுதா, இயக்குநா் பிரவீன் பி.நாயா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com