ஆவடி ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆவடியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்
ஆவடி ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

ஆவடியில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

ஆவடி, பக்தவச்சலபுரத்தில் ஸ்ரீ ஐயப்பன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலை ஆவடி, அண்ணனூர், திருமுல்லைவாயல், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை, மிட்டினமல்லி, கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், பத்திரகாளியம்மன் குணபிரஷ்ட்டை விழாவும் நடைபெற்றது. சபரிமலை தலைமை தந்திரி கந்தரு ராஜீவரு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். கேரளாவில் சிறப்பு வாய்ந்த ராதாகிருஷ்ணன் மாராரின் செண்டை மேளம் நடைபெற்றது. 

கும்பாபிஷேக விழாவில் ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் கோயிலில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் சிறப்புப் பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com